இனிமைத் தமிழ் மொழி எமது


அறிவில் பிறந்து 

ஆற்றலில் வளர்ந்து 

இன்பம் நல்கி 

ஈகை போதித்து 

உண்மை உரைத்து 

ஊக்கம் வழங்கி 

எளிமை விளக்கி 

ஏற்றம் தந்து 

ஐயம் அகற்றி 

ஒழுக்கம்  நிறைந்து 

ஓவியமாகத் தோன்றி 

ஔவையின் கருத்தில் மலர்ந்த

இனிமைத் தமிழ் மொழி எமது !


முனைவர் பா.ஸ்ரீவித்யாபாரதி



















Comments